Tuesday, March 27, 2007

நவரச நாயகன் திராவிட் பராசக்தி பாணியில் பேசினால்?!!!

உலகக் கோப்பை. பல விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும் இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடமும் தோற்றேன்- அவர்களிடம் தோற்க்க வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த வஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையை தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. தங்களைப்போல பிறரையும் நேசி என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீல்டரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச் சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் சாத்து சாத்தென்று சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் வெயில் தாங்கலைன்னு பெவிலியனுக்கு ஓடும் மாஸ்டர் பிளாஸ்டர்களால் பாதிக்கப்பட்டேன்.

கேளுங்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தயவு செய்து கேளுங்கள் என் கதையை...

No comments:

Post a Comment

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...