Wednesday, March 28, 2007

நக்கீரர் தேவர் அருளியது விநாயகர் திருவகவல்

சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மவிய மார்பா!
பொங்கர வணிந்த புண்ணிய மார்பா!
சங்கர னருளிய சற்குரு விநாயக!
ஏழை யடியேன் இருவிழி காண
வேழ முகமும் வெய்பிளைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறுந்
திருவளர் நுதலில் திருநீற் றழகுஞ்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுட நன்மலர் முடியும்
கலச குண்டலக் காந்தியும் விளங்கச்
சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தின் அழகும் லீற்றிருக்கப்
பாச வினையைப் பறித்திடும் அங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன்னா பரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விறங்குபட் பழகும்
உந்திச் சுழியு முரோமத் தழகுந்
தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற
மூலா தார முச்சுடர் காட்டி
வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜா க்~ரமும்
ஓமென் றுதித்த ஓங்கார துள்ளே
ஆமென் றெழுந்த அக்~ர வடிவும்
இடைபிங் கலைக ளிரண்டின் நடுலே
கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து
மண்டல மூன்றும் வாயுவோர் பத்துங்
குண்டலி யசபை கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையுங் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப்
பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த
பஞ்ச சக்திகளின் பாதமுங் காட்டி
நவ்வொடு மவ்வும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அநாதி சதாசிவம்
மைவிழி ஞான மனோன்மணி பாதமும்
நைவினை நாணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டல மான வெளியையுங் காட்டிப்
ஐம்பத்தோ ரெழுத் தட்சர நிலையை
இன்h சக்கர விதிதனைக் காட்டிப்
புருவ நடுவணை பொற்கம லாசான்
திருவிளை யாடலுந் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப்
போதம் நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவளம் நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாயச் சேர்வையுங் காட்டிச்
சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித்
தத்துவந் தொண்ணூற் றாறையும் நீக்கிக்
கருவி கரணக் களங்க மறுத்து
மருவிய பிறவி மாயையை நீக்கி
உம்பர்கள் ரி~pகள் ஒருவருங் காணா
அம்பர வெளியி னருளையுற் காட்டிச்
சத்தி பராபரை சதாநந்தி நிராமய
நிததிய ரூபி நிலைமையுங் காட்டி
அடியவர் ஞான வமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
விண்மய மான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவி யிடம்பொருற் யாவுந்
தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந் தீர
ஆன குருவா யாட்கொண் டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிட்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீடனுஞ் கூடிக் கலந்து
இருவரு மொருதனி யிடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிலைப் பொய்யென் றுணர்ந்து
மவுன முத்திரையை மனத்தி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டவை மாயை கனவெனக் காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈ சன் இணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென வுணர்நது
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுன்னருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே!
வாரண முகத்து வள்ளலே போற்றி!
நித்திய பூசை நைவேத் தியமும்
பத்தியாய்க் கொடுத்துப் பரமனைப் போற்றி
ஏத்தி யனுதினம் எளியேன் பணியக்
கூற்றினை உதைத்து குளிர்பதந் தந்து
ஆசு மதுர வமிர்த மளித்துப்
பேசு ஞானப் பேறெனக் கருளி
மனதில் நினைத்த மதுர வாசகம்
நினைவிலுங் கனவிலும் நேசம் பொருந்தி
அருண கிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்து கவிமழை பொழிய
வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வாழ்க்கை யிடையூ றகற்றிப்
புல்ல ரிடத்திற் புகுந்(து) உழலாமல்
ஏற்ப திகழ்ச்சி என்ப தகற்றிக்
காப்ப துனக்குக் கடன்கண் டாயே!
நல்வினை தீவினை நாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நியே ஈ சனும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அகரியும் நீயே அயனும் நீயே
சக்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே புரந்தகன் நீயே
பத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேகியும் நீயே!
உன்னரு ளன்றி யுயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதன் கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருந்திடு சிலேட்டுமம்
மூன்று நாடியு முக்குண மாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலாயிரத்து நானூற்று நாற்பத் தெட்டு
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளியே நித்தம்
பஞ்சாட் சரநிலை பாலித் தெனக்குச்
செல்வமும் கல்வியுஞ் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயகா
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்
புத்திர னேதரும் புண்ணி முதலே
வெண்ணீ றணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே
அரிதிரு மருகா அறுமுகன் றுணைவா
கரிமுக வாரணக் கணபதி சரணம்!
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
மாதை வாவி மலர்த்டத் தருகில்
தானத்தில் வாழுந் தற்பரா சரணம்!
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சி தானந்த சற்குரு சரணம்
விக்கின விநாயக தேவே ஓம் ஓம்!
அரகர சண்முக பவனே ஓம் ஓம்!
சிவசிவ மகாதேவ சம்போ ஓம் ஓம்!

விநாயகர் அகவல் ஒளவையார் அருளியது

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்(கு) அருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஈறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நாறெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையம்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாகஇனி தெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசன படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்(து) எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே!

Tuesday, March 27, 2007

நாயகன் பாணியில் இந்திய அணியின் நாயகன் பேசினால்...??!!

அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன். கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலே மீட்டர் ஓடிப்போங் பந்ததைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்தறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால் வடை வைக்குற மாதிரி ஸ்pலப் வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்த்னே அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் நோபால் போட்டான் பாரு டெண்டுல்கர் அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல் நான் நிறுத்தறேன். எந்தப்பக்கம் அடிச்சாலும் அந்தப்பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு அதை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்கிறானுங்க பாரு அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்தறேன். புறபடும்போதே கமான் இந்தியான்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன் அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா, எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வௌஸ்தை கெட்டவனுங்க, அவனுங்களை நிறுத்தச்சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..

நவரச நாயகன் திராவிட் பராசக்தி பாணியில் பேசினால்?!!!

உலகக் கோப்பை. பல விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும் இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடமும் தோற்றேன்- அவர்களிடம் தோற்க்க வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த வஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையை தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. தங்களைப்போல பிறரையும் நேசி என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீல்டரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச் சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் சாத்து சாத்தென்று சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் வெயில் தாங்கலைன்னு பெவிலியனுக்கு ஓடும் மாஸ்டர் பிளாஸ்டர்களால் பாதிக்கப்பட்டேன்.

கேளுங்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தயவு செய்து கேளுங்கள் என் கதையை...

Wednesday, March 21, 2007

கிரிக்கெட் மாப்ள..... கிரிக்கெட்!!!

இன்சமாம் : நீ முன்னாலே போ நான் பின்னாலே வரேன்னு சொல்லி இப்படி ஏமாத்திப்புட்டியே பங்காளி

டிராவிட் : அட நீங்க வேற பங்காளி.... அவனவன் வீடு புகுந்து அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... சம்பாதிச்ச காசு... பொண்டாட்டி, புள்ள... அடுத்த அட்வர்டைஸ்மண்ட் எல்லாம் பார்க்க வேண்டாமா!!! அதான் நான் கூட கடைசி பால்ல சிக்ஸ் அடிச்சேன்....

லீவராக் : என்ன ஏதுன்னு கேட்காம ஒரு பச்ச புள்ளய போட்டு இப்படி துவைச்சு துவம்சம் பண்ணிட்டியேடா... நீ அடிச்சது ஒரு புள்ள பூச்சிய.. உணக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடையாது... இதுக்கெல்லாம் ஒரு ரெப்ரி.... மூணு அம்பயர்ஸ்!!!

டிராவிட் : நீங்கதாண்டா பால் போட்டீங்க... ஏன் அப்படி போட்டீங்க?

லீவராக் : அது உங்க பேட்ஸ்மேன் ஒருத்தன் சொன்னான்..... நாம எப்படி அடிச்சாலும் இவன் நல்லா பந்து போடுறான்டா!! இவன் ரொம்ப நல்லவன்னுட்டான்டா....

கிரிக்கெட் கவுன்சில் : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!!

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...