Thursday, February 22, 2007

எனது இன்றைய நாள் 22.02.07 - வியாழக் கிழமை

இன்று காலை சுமார் 7.00 மணியளவில் எழுந்த நான் கிளம்பி சாப்பிட்டு டெய்லி டியூட்டீ (இது மட்டும் பர்சனல், நான் என்ன வேலைனு சொல்லமாட்டேன்....) க்கு சரியாக 9 மணிக்கு சென்றேன். டியூட்டி முடிந்து 10.15 அளவில் அலுவலகம் சென்று காலையில் வேலையில் மனம் ஓடாத காரணத்தால் மற்ற மெயில்களை பார்த்து விட்டு மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என பராக்கு பார்த்தேன். பின்னர் டீ பிரேக். கடைக்கு சென்று ஆல்பன்லீபே வாங்கி தின்றுகொண்டே மீண்டும் வேலை. அருகிலிருப்பவர் (வேற யாரு பிரகா~; தான்) டாக்குமெண்ட் செய்தவற்றை சரிபார்த்தேன்.

பின்னர் இன்றுதான் ஒரு மிக முக்கிய செய்தி கண்ணில் பட்டது. (இது எங்க டீம் எனக்கு சொன்னது). அது 13 ஆம் வெள்ளியின் தவறு (பிரைடே த 13த் பக்), நான் கூகுலில் தேடி பிடித்த http://www.2038bug.com/, இந்த வெப் சைட்டில் போட பட்டிருக்கிறது. அதை படித்த பின் துரை பாபுவிடம் ஒரு 15 நிமிடம் மொக்கை. பிறகு மதிய உணவிற்கு சென்று, தின்று, மீண்டும் ஒரு டியூட்டி. பின்னர் விசுவல் பேசிக் இன்ஸ்டால் பண்ணிவிட்டு மறுபடியும் அலுவலகம் வரும் போது மணி 3.

பின்னர் சிறிது நேரம் எனது வேலையை செய்து கொண்டிருந்தேன். ஒரு 5 மணியளவில் லினக்ஸில் உள்ள சில பைல்களை விண்டோஸிற்கு மாற்ற ஒரு டூல் இன்ஸ்டால் செய்து விட்டு, மீண்டும் ஒரு டீ பிரேக். அங்கு நாங்கள் சாப்பிட்ட லிஸ்ட் டீ, காபி, வெஜ் பப்ஸ், அல்வா, சிக்கன் 65, மட்டன் சூப், பனியாரம், தயிர்சாதம் வித் உருளைகிழங்கு பொரியல்.

அதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கும் போது தான், இதை இந்த பிளாக்கில் போடலமென ஒரு எண்ணம் தோன்றியது, அதையும் உடனே நிறைவேற்றிவிட்டேன்.

Tuesday, February 13, 2007

எனது பாண்டிச்சேரி பயணம்

எங்களது (நான் மற்றும் எனது நன்பர் திரு.ம.செந்தில்குமார்) பாண்டிச்சேரி பயணம் 9.2.07 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கியது. முதலில் தருமபுரியிலிருந்து புறப்பட்ட நாங்கள் திருவண்ணாமலைக்கு சென்றோம். அந்த பேருந்தில் பாடாவதி படம் உலக பேருந்து வரலாறில் 10000 ஆவது முறையாக அஜீத் நடித்த வில்லன் திரைப்படம். அப்பா ஒரு வழியாக அந்த படம் முடிந்தவுடன் நல்ல பாடல்களாக போட்டு (ஊமைவிழிகள், செந்தூரப்பூவே....) எங்களது காதில் பாலை ஊற்றினார் அந்த டிரைவர்.

திருவண்ணாமலையில் நாங்கள் இரண்டு நல்ல ஹோட்டல்களுக்கு சென்று ஒன்னுமே சாப்பிடாமல் திண்டிவனம் பஸ்ஸில் ஏறினோம். அதில் சீட் ஒன்றாக அமர சீட் கிடைக்காததால் பிரிந்து அமர்ந்து மற்ற பயணிகளை தொந்திரவு செய்யாமல் அமைதியாக திண்டிவனம் வந்து சேர்ந்த பொழுது சரியாக இரவு 10.50. அதன்பிறகு ஒரு சூப்பர் பஸ்ஸில் பாண்டிச்சேரி பயணம். அடடா காதில் தேன் வார்த்தது போன்ற பாடல்கள் (முக்கியமாக ஜக்கம்மா பாட்டு படா சோக்கா இஞ்சிபா.....)

கண்,காது,மூக்கு மற்றும் இன்னபிற வலிகளுடன் பாண்டி வந்த பிறகு அங்கிருந்து அரியாங்குப்பத்திற்கு பஸ் ஏறி வீட்டிற்கு ஒரு கிலோமீட்டர் நடக்க வைத்து கூட்டி சென்றதில் உடம்பில் நட்டுகள் கழன்று ஒரு வழியாக தூங்கினோம்.

அடுத்த நாள் காலை 7.30 மணியளவில் எழுந்து கிளம்பி புதுவகையாக தயாரிக்கப்பட்ட இடியாப்பம் (முதலில் இட்லி அவித்து பின்னர் ஒரு குழாய் போன்ற அமைப்பில் செருகி மேலே திருவினால் அவித்த இட்லி இடியாப்பமாக மாறுகிறது!!!!) தேங்காய் பாலுடன் (இதுதான் எனது முதன் முதல் இடியாப்பம் வித் தேங்காய்ப்பால்... ரொம்ப சுவையாக இருந்தது..) சாப்பிட்டுவிட்டு இரண்டு வண்டிகளில் (பஜாஜ் பல்சர் மற்றும் பஜாஜ் எம்80) நாங்கள் இருவர், செந்திலின் தம்பி மற்றும் அவரின் நண்பர் நால்வரும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று தரிசனம் (!!!!!!!) பார்த்துவிட்டு பிறகு ஆரோவில்லிற்கு சென்றோம்.

அங்கு ஒரு படத்தை போட்டுவிட்டு இதை பார்த்தால் தான் பாஸ் தருவோம் என கூறி அதை பார்க்க வைத்தனர். இந்த சந்து கேப்பில் இரண்டு பிகர்ஸ் (பெண்கள்...) வந்து அந்த பாஸ் ஒரு கத்தை (8 பாஸ்) எடுத்து கொண்டு கம்பி நீட்டிவிட்டார்கள். நாங்கள் படத்தை பார்த்த பிறகு எங்கள் நால்வருக்கும் சேர்த்து ஒரு பாஸ்ஸில் 4 என்று எழுதி கொடுத்துவிட்டார்கள். நாங்கள் அடித்துபிடித்து சென்றால் அங்கு கேட்டில் அந்த 8 பேரையும் நிறுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் விசாரனை. அது ஒரு பயங்கர தமாசு. பிறகு அந்த காவலர் அவர்களை எச்சரித்து உள்ளே அனுமதித்தார். அங்கு உள்ளே அந்த கோளவடிவ அரங்க வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் எங்களை உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அங்கு வெளியிலிருந்து பார்க்கும் போதே எங்களுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டோம். வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஒரு சூப்பர் திரைப்படத்திற்கு ( பாவனா (ஜொள்ளு...) மற்றும் ஜெயம் ரவி நடித்த தீபாவளி) சென்று பாவனாவை மட்டும் பார்த்து விட்டு (வேறு ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அந்த படத்தில் ஒன்றும் இல்லை) பின்னர் கடற்கரை சென்று அங்கிருந்த நல்ல நல்ல ...... இடங்களை மட்டும் பார்த்துவிட்டு ஊரை சுற்றிவிட்டு அங்கு பானிபூரி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று பெரிய தம்ளரில் ரசத்தை ஊற்றி குடித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தோம். பிறகு தொலைகாட்சியில் நமது சாம்பார் நடித்த (ஜெமினிகணேசன்) சாந்திஇல்லம் படம் பார்த்துவிட்டு நன்றாக தூங்கினோம்.

அடுத்தநாள் காலை 7.00 மணிக்கு எழுந்து கிளம்பி சிதம்பரம் செல்வதற்காக சென்றோம். பாண்டியிலிருந்து கடலூர் சென்று அங்கிருந்து சிதம்பரம் சென்றேபொழுது காலை மணி 9.30. சிதம்பரத்தில் எனது நண்பர் நீலகண்டனின் வீட்டிற்கு சென்று காலை உணவு அருந்திவிட்டு (இரண்டாவது முறை சாப்பாடு, முதல் சாப்பாடு பாண்டியில் 7.30 க்கு ஒரு ஹோட்டலில்) நடராசர் கோவிலுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு திரும்ப வீட்டிற்கு செல்லும்போது மணி 1.00 தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே தயாராய் இருந்த மதிய உணவையும் முடித்தோம். பிறகு அங்கிருந்து 2.00 மணியளவில் கிளம்பி கடலூர் வழியாக பாண்டி வந்தடைந்தபோது செல்பேசி மணி 4.30 என்றது. பின்னர் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்த பின் எறால் பிரியாணி, எறால் வறுவல், கடல்மீன் குழம்பு என்று ஒரு பிடிபிடித்து விட்டு அருகிலிருந்த கடற்கரைக்கு சென்று சுமார் 1.30 மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் 8.00 மணிக்கு வீட்டிற்கு சென்று அங்கிருந்து கிளம்பி பேருந்து நிலையம் சென்றோம். அங்கு நின்று கொண்டிருந்த சேலம் செல்லும் பஸ்ஸில் கடைசி சீட்டிற்கு முன்னிருந்த சீட்டில் அமர்ந்து கொண்டு அவரை நல்லபடியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டு வாங்கியிருந்த பாக்யா புத்தகத்தில் மூழ்கினேன். பஸ் ஒரு வழியாக 10.00 மணிக்கு கிளம்பியது அது கடலூர் வழியாக பன்ருட்டி வரும் வரை தூக்கம் இல்லாமல் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துகொண்டு வந்தேன். பின்னர் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்து பார்த்தால் மிகமிக மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சின்னசேலம் வந்து விட்டது. பின்னர் மெதுவாக நகர்த்தி நகர்த்தி சேலம் வந்து சேரும் பொழுது காலை 4.00 மணியாகிவிட்டது. பின்னர் அங்கு புறப்பட தயாராக இருந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறினால் தருமபுரியை அது ஒரு மணிநேரத்தில் வந்தடைந்தது (65 கி.மீ.).

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...