Wednesday, September 14, 2022

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல!

புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்
 பட்டிருக்கிறோம். 

பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்படி அழைப்பது உண்டு. 

பொறுப்பின்றி நடந்து கொள்பவர்களையும் இந்த வார்த்தையைச் சொல்லி திட்டுவதையும் கேள்விப் பட்டிருக்கலாம். 

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல!

_*இது ஒருவருடைய பெயர் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?*_

இங்கிலாந்து அரசு வரிவிதிப்பு அதிகாரிகளில் _*ஒருவர் பெம்புரோக்.*_

இங்கிலாந்திலும், அவர்கள் ஆட்சிப்பகுதியின் கீழ் இருந்த பல்வேறு நாட்டுப் பகுதிகளிலும் வரி வசூலாகாமல் நிறைய இடங்கள் இருந்தன. அந்த இடத்துக்குரியவர்கள் யார்? ஏன் வரி செலுத்தவில்லை. நிலத்துக்குரியவர்கள் இருக்கிறார்களா? இல்லை மறைந்து விட்டார்களா என்பதை விசாரித்து வரி வசூலிப்பை தீவிரப்படுத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அவரும் நில உரிமையாளர்களைச் சந்தித்து, வரி வசூலித்ததுடன், வரி செலுத்தாமல் இடம் பெயர்ந்தவர்கள், மறைந்தவர்கள் ஆகியவர்களின் நிலங்களை அரசுடமை ஆக்கினார்.

இப்படி இந்தியப் பகுதியிலும் ஏராளமான சொத்துக்கள் ஆங்கிலேயர் வசமாயின. அப்படி கைப்பற்றப்பட்ட இடங்களை _*"பெம்புரோக் நிலம் "*_ என்று அழைக்கப் பட்டன. காலப்போக்கில் அந்த சொல் மருவி _*"புறம்போக்கு"*_
 என அழைக்கப்
படலாயிற்று.

Thursday, September 2, 2021

தருமபுரியில் 36வது தேசிய புத்தக கண்காட்சி

நமது தருமபுரியில் 36வது (27.Aug.2021) தேசிய புத்தக கண்காட்சியை தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் இன்று தொடங்கி வைத்தார்

Tuesday, November 29, 2016

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?

🍁

🌺 *பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*
 
    *பட்டா :*

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை  அளிக்கும் சான்றிதழ்.

*சிட்டா :*

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*அடங்கல் :*

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*கிராம நத்தம்*

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

*கிராம தானம் :*

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

*தேவதானம் :*

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

*இனாம்தார் :*

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு.

நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது.

ஷரத்து= பிரிவு.

இலாகா = துறை.

*கிரயம்*

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

*வில்லங்க சான்று*

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின்  விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் = நில அளவை எண். (Survey number)

இறங்குரிமை =
வாரிசுரிமை (succession)

*தாய்பத்திரம்*
(Parent deed)

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

*ஏற்றது ஆற்றுதல்*

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)

*அனுபவ பாத்தியம்*
( possessory right)

நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.

*சுவாதீனம் ஒப்படைப்பு*

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி =  வருவாய்தீர்வாயம்.

நன்செய்நிலம் =
அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம் =
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

*குத்தகை*
(Lease)

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
                 🍁🙏🌺

🍁

Friday, November 4, 2016

இலக்கணம் - எத்தனை வகைகள் !!!

இலக்கணம் - எத்தனை வகைகள்:-
🌷இலக்கணம்- 5
🌷முதலெழுத்துகள் - 30
🌷சார்பெழுத்துகள் - 10
🌷சுட்டெழுத்துகள் - 3
🌷இலக்கண வகை சொற்கள் - 4
🌷பெயர்ச் சொற்கள் - 6
🌷வேற்றுமை உருபுகள் - 8
🌷போலிகள் - 3
🌷இடம் - 3
🌷நிலம் - 5
🌷சுவை - 6
🌷மெய்ப்பாடுகள் - 8
🌷பதம் - 2
🌷பகாபதம் - 4
🌷பகுபதம் - 6
🌷உறுதிப்பொருள்கள் - 4
🌷தொகை நிலைத்தொடர்கள் - 6
🌷தொகா நிலைத்தொடர்கள் - 9
🌷பருவங்கள் (மலர்) - 7
🌷புணர்ச்சி - 2
🌷விகாரப் புணர்ச்சி - 3
🌷செய்யுள் உறுப்புகள் - 6
🌷பா வகைகள் - 4
🌷அசை - 2
🌷அளபடை - 2
🌷உயிரளபெடை - 3
🌷ஆகுபெயர் - 16
🌷வழாநிலை - 6
🌷வழுநிலை - 7
🌷பொருள்கோள் - 8
🌷தளை - 7
🌷அடி - 5
🌷தொடை - 8
🌷மோனை - 7
🌷மொழிகள் - 3
🌷வினா - 6
🌷விடை - 8
🌷புறத்திணைகள் - 12

Thursday, October 20, 2016

பரம்பரை

நாம் - முதல் தலைமுறை,

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,

பரன் + பரை - ஏழாம் தலைமுறை,

பரன் + பரை = பரம்பரை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,

ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..

ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை
முறையாக என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

🍁 காலை வணக்கம் 🍁

Sunday, October 16, 2016

பை - 22/7 என்பது என்ன ?

எட்டாம் வகுப்பு படிக்கும்  மாணவர் தனது  கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

அப்போது ஒரு மாணவர்  கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...

மாணவர் : இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.

ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?

மாணவர் : சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.

மாணவர் : ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.

ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் மாணவர்  கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை.  விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து மாணவர் வகுப்பில்  உள்சென்றார்

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.

மாணவரின்  தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். மாணவரின்  ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணி மாணவரிடம்  வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற மாணவர்  எழுத வேண்டும்.

அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் மாணவரை நெருடியது. அவ்வாக்கியம்,

ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.

இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக மாணவருக்கு  நினைவுக்கு வர,  தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினான்.

பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.

       அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.

இந்த விளக்கம்  தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். மாணவரும்  சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டான் . அதற்கு  தாத்தா கூறிய வார்த்தைகள் தான் மாணவர்  மிகவும் பாதித்தது.

அவ்வார்தைகள்.....

உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ....

ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைவோம் .

ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???

எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????

உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன?
சிந்தியுங்கள் நண்பர்களே???

*இப்போது உள்ள கல்வி முறை ஆங்கிலேயர்கள்  நம்மை சிந்திக்க விடாமல் நம்மை அடிமையாக அலுவலக உதவியாளர் பணிக்கு தயார் படுத்திட உருவாக்க பட்ட பாடத்திட்டம் தான் இன்றைய போதனை வழி கல்வி முறையும்,*
*புரிந்து கொள்ளாத மொட்டை  மனப்பாட கற்றல் முறையும்.*

படித்ததில் பிடித்தது.

Friday, October 7, 2016

சூசை - திகில் கதை

திகில் கதை... பயமுள்ளவர்கள் படிக்க வேண்டாம்

அது ஒரு மலைப் பிரதேசம்.  கும்மிருட்டு . கடுமையான மழை.
சூசை பஸ் ஸ்டாப்பில் சிக்கிக்கொண்டிருந்தார். யாருமே சாலையில் நடமாடவில்லை. பஸ் ஒன்றும் வருவதாகத் தெரியவில்லை.

ஏதாவது கார் வந்தால் லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், ஒரு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது ;பஸ் ஸ்டாப் அருகில் நின்றது.

சூசைக்கு யோசிக்க நேரம் இல்லை. கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்தார். கார் மீண்டும் மெதுவாக நகர ஆரம்பித்தது.

அப்பொழுதுதான் சூசை கவனித்தார். டிரைவர் சீட்டில் யாருமே இல்லை. ஆனால் கார் நகர்ந்துகொண்டே இருக்கிறது. சூசைக்கு பயம் தலையிலிருந்து கால்வரை ஊசி போட்டது.

சாலையில் 90 டிகிரி திருப்பம். எதிரே கிடுகிடு பள்ளம். நாம் நிச்சயம் காரோடு சமாதி...செத்தோம்...  எண்ணிக்கொண்டிருந்த வேளையில், காரின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஒரு கை உள்ளே நீண்டு ,ஸ்டீரிங்க் வீலை திருப்பியது.

பயத்தின் உச்சத்துக்கு சென்ற சூசைக்கு, கார் கதவைத் திறந்து வெளியே குதித்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு ஹோட்டல் தெரிந்தது.  ஓட்டமாக ஓடி அங்கே சென்றார்.

“ஒரு கார் டிரைவர் இல்லாமல் வந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு பிசாசு வேலைதான். ரொம்ப பயமா இருக்கு”
என்று ஹிஸ்டீரியா வந்தது போல கத்தினார்.

ஹோட்டலில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் வெளியே எட்டிப்பார்த்தனர். அந்த கார் மெதுவாக வந்து ஹோட்டலுக்கு முன்னால் நின்றது.

அதன் பின் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட இரண்டு மனிதர்கள் கருப்பு ரெயின் கோட்டோடு உள்ளே நுழைந்தனர்.
.
.
.
.
.
.
.
.
.
அவர்களில் ஒருவன் சூசையை சுட்டிக்காட்டி, “இந்த ஆளுதான். ரிப்பேரான காரை நாம மழையில தள்ளிகிட்டு வரும்போது உள்ளே ஏறி உக்காந்தவன்” என்றான்.

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...