Friday, June 5, 2009

சத்தமிடுதல்:

ஒரு புனிதர் அவரது சிஷ்யர்களிடம் கேட்டார் “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்?”, “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்? ஏன் மக்கள் அவர்கள் சிக்கலில் இருக்கும்போது மற்றவர்களிடம் சத்தமிட்டு பேசுகிறார்கள் ?”
அவரது சிஷ்யர்கள் சிறிது நேரம் ஆலோசனை செய்தனர். அவர்களில் ஒருவன் சொன்னான் “ஏனென்றால் நாம் அமைதியை இழந்து விடுவதால் சத்தமிடுகிறோம்”.

“ஆனால், அடுத்தவர் நமது மிக அருகில் இருக்கும் போது, நாம் ஏன் மிகவும் சத்தமிடவேண்டும்? அவர்களிடம் மிகவும் மென்மையாக பேச முடியாதா? நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்? ” என்று திரும்பவும் கேட்டார்.
அவரது சிஷ்யர்கள் கொடுத்த விடைகளால் அவரை திருப்திபடுத்த இயலவில்லை.

கடைசியாக அவர் சொன்னார் “ஒருவர் மேல் ஒருவர் கோபமாக இருக்கும்போது அவர்களது இருதயத்தின் (மனது) தூரமும் அதிகமாக இருக்கும். அதனை வெற்றிகொள்ளவே நாம் மிகவும் சத்தமிட்டு பேசுகிறோம்”.
நீதி : நாம் விவாதிக்கும் போது நமது மனதின் தொலைவினை அதிகப்படுத்தாமல், கடுஞ்சொற்களால் அத்தொலைவினை அதிகப்படுத்தாமல் இருக்கவேண்டும், இல்லையெனில் ஒருநாள் அந்த தொலைவு மிகவும் அதிகமாகி நாம் திரும்ப வருவதற்கான வழி தெரியாமல் தவிக்க வேண்டியிருக்கும்.

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...