Thursday, January 21, 2010

பொதுவுடைமை தத்துவம்

ஒரு பொருளியல் விரிவுரையாளர் உள்@ர் கல்லூரி ஒன்றில் கொடுத்த அறிக்கையில் அவர் இதுவரை ஒரு மாணவரை கூட தேர்வில் தோல்வியடைய செய்ததில்லை என்று கூறியிருந்தார். அவரது வகுப்பில் இருந்த மாணவர்கள் ஒபாமாவின் பொதுவுடைமை தத்துவம் நன்றாக வேலை செய்வதாகவும், இதற்கு பிறகு எவரும் ஏழையாகவும் இருக்கமாட்டார்கள் எவரும் பணக்காரராகவும் இருக்கமாட்டார்கள், மிகப் பெரிய சமத்துவம் என்று கூறினர்.
அந்த விரிவுரையாளர் அதற்கு நாம் இந்த தத்துவத்தை நமது வகுப்பில் செயல்படுத்தி பார்ப்போம் என்றார், எல்லாரது மதிப்பெண்களும் கூட்டி சராசரியை எல்லா மாணவர்களுக்கும் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
முதல் தேர்வில் எல்லாரது மதிப்பெண்களும் கூட்டி சராரசரியாக எல்லாருக்கும் 70 சதவீதம் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். குறைவான மதிப்பெண் எடுத்த அணைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
அடுத்த தேர்வில் குறைவாக படித்த மாணவர்கள் இன்னும் குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். ஆதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களும் குறைவாக படித்து குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். எனவே அனைவரும் சராசரியாக 50 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. எனவே யாருமே மகிழ்சியாக இருக்கவில்லை.
மூன்றாவது தேர்வில் இன்னும் குறைவான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள், நான்காவது தேர்வில் அனைவரும் தோல்வியடையும் அளவுக்கே சராசரி மதிப்பெண் இருந்தது.
பிறகு அந்த விரிவுரையாளர் “பொதுவுடைமை தத்துவமும் தோல்வியடையும், ஏனென்றால் வெகுமதி அதிகமாக இருக்கும் போது முயற்சியும் அதிகமாக இருக்கும், அரசு அந்த வெகுமதியை எடுத்துப் போடும்போது எவருமே வெற்றி பெற முயற்சிக்கமாட்டார்கள்” என்றார்.

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...