Tuesday, November 29, 2016

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?

🍁

🌺 *பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*
 
    *பட்டா :*

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை  அளிக்கும் சான்றிதழ்.

*சிட்டா :*

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*அடங்கல் :*

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*கிராம நத்தம்*

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

*கிராம தானம் :*

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

*தேவதானம் :*

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

*இனாம்தார் :*

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு.

நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது.

ஷரத்து= பிரிவு.

இலாகா = துறை.

*கிரயம்*

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

*வில்லங்க சான்று*

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின்  விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் = நில அளவை எண். (Survey number)

இறங்குரிமை =
வாரிசுரிமை (succession)

*தாய்பத்திரம்*
(Parent deed)

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

*ஏற்றது ஆற்றுதல்*

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)

*அனுபவ பாத்தியம்*
( possessory right)

நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.

*சுவாதீனம் ஒப்படைப்பு*

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி =  வருவாய்தீர்வாயம்.

நன்செய்நிலம் =
அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம் =
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

*குத்தகை*
(Lease)

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
                 🍁🙏🌺

🍁

2 comments:

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...