Friday, April 30, 2010

திருக்குறளுக்கு விளக்கம் தேவையில்லை: இளையராஜா

சென்னை, ஏப். 25: திருக்குறளைப் படிக்கும் போதே பொருள் புரிகிறது அதற்கு தனியாக விளக்கம் தேவையில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.


சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கானசபாவில் ஞாயிற்றுக்கிழமை, கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள குறள் தரும் பொருள் இசை சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியது:÷2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.


1929-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது "நான் உங்கள் வீட்டு பிள்ளை' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், "ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர் என்றார்.


நடிகர் விவேக்: "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும் என்றார்.


நடிகர் எஸ்.வி.சேகர்: இசைக்கு மொழி பேதம் கிடையாது. தெலுங்கு மொழியே தெரியாவர்கள் கூட கீர்த்தனைகளை பாடுகிறார்கள், கேட்கிறார்கள். இசை என்பது மொழிக்கு அப்பாற்பட்டது. கலை என்பது அரசியலை தாண்டிய விஷயம் என்றார்.


கவிஞர் பூவை செங்குட்டுவன்: திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளை படித்து மு.வ. சாரங்களை வைத்துக் கொண்டு 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது என்றார். இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், நடிகர் உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

THANKS : Mail from SSiva

No comments:

Post a Comment

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...