Thursday, February 5, 2009

தமிழ்நாட்டில் நேற்று(04.02.09) நடந்த பந்த்

தமிழ்நாட்டில் நேற்று(04.02.09) நடந்த பந்த் அனைத்து இடங்களிலும் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் நடந்ததாக அரசு மார்தட்டிக் கொள்கிறது. நான் இது குறித்து எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் இலங்கையில் நடக்கும் போரை மிகவும் வெறுக்கிறேன். அது ஒரு மனித தன்மையற்ற செயல் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.
இதற்காக நமது தமிழகத்தில் ஓர் இயக்கத்தை தோற்றுவித்து நமது தமிழக தலைவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பது நல்ல செயலே. அவர்கள் ஒரு நாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த போது எனது ஆதரவு மனதளவில் தெரிவித்தேன். ஆனால் நேற்று நான் கண்ட சில காட்சிகள் இந்த அடைப்பின் நோக்கமே கெட்டுவிட்டதை தெரிவிப்பதாக கண்டேன்.
இந்த அடைப்பின் நோக்கமே நமது சகோதரர்கள் அங்கே இலங்கையில் மிகவும் சிரமபடுத்துவதை தடுக்க நமது அரசின் பார்வையை நமது பக்கம் திருப்புவதற்கே. இலங்கையில் உள்ள நமது சகோதரர்கள் துயரப்படுவதை தடுக்க நமது சகோதரர்களை சிரமபடுத்துவது எந்த வகையில் நியாயமாகும்? இங்கே நான் கண்ட காட்சியில் எத்தனை பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது, எத்தனை அலுவலகங்கள் நாசமாக்கப்பட்டன, நமது சென்னையில் ஒரு சைக்கிள் கடை அடித்து நொறுக்கப்பட்டது, அவரின் நிலைமை என்ன? தருமபுரியில் எல்.ஐ.சி நிறுவணம் அடித்து நொறுக்கப்பட்டு பேருந்துகள் நொறுக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டது. இதிலிருந்து நாம் சொல்வது என்ன? நமது நோக்கம் சரியான வழியில் நிறைவேறியதா?
கவணியுங்கள் தோழர்களே, நமது எதிர்ப்பு அறவழியில் நாம் காண்பிக்க புறப்பட்டுள்ளோம். இங்கே என்னவென்றால் சாராய கடையை சூறையாடி அனைத்து பாட்டில்களும் களவடிக்கப்பட்டன. இது எதற்காக? இலங்கையில் அமைதி திரும்பவா?
நான் நமது இயக்கத்தை குறை கூறவில்லை, இந்த அடைப்புக்ககு எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. ஏனென்றால் எனது அலுவலகம் நேற்று விடுமுறையிடப்பட்டு முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது.
சிந்தியுங்கள் தோழர்களே……..

No comments:

Post a Comment

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...