Thursday, July 26, 2007

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்


அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஒரு அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பாரத்து தினம் உன் தலை கோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்


நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில்
மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் சீண்டலில் என் தேகத்தை புது
ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

2 comments:

  1. கிறிஸ்டோபர், வணக்கம். என் பெயரை இணையத்தில் தேடி உங்க வலைப்பக்கம் வர நேர்ந்தது. தற்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளீர்களா? எழுதுங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம்..

    ReplyDelete
  2. வணக்கம் ஜான், என் வலைப்பக்கத்திற்கு வந்ததற்கு நன்றி, இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன். முடிந்தவரை எழுதுவதற்கு ஆர்வம் உண்டு.

    ReplyDelete

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...