Showing posts with label கிறிஸ்துவம். Show all posts
Showing posts with label கிறிஸ்துவம். Show all posts

Monday, June 3, 2013

அருமையான பாடல் - நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே

நீ போகும் இடமெல்லாம்

பாடல் வரி :Dr.Rev.Ezekiel George.
Music : Suresh George.


நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே


தண்ணீரை கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
தண்ணீரை கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
மூழ்காமல் வேகாமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் இருப்பேன் எந்நாளும்
மூழ்காமல் வேகாமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் இருப்பேன் எந்நாளும்

நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே

தாகத்தால் நாவறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
தாகத்தால் நாவறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
கன்மலையின் தண்ணீரை பருகிட நீயும்
கை பிடித்து உன்னை நான் நடத்துவேன் நானும்
கன்மலையின் தண்ணீரை பருகிட நீயும்
கை பிடித்து உன்னை நான் நடத்துவேன் நானும்

நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ என் தாசன்
நான் உன்னை தெரிந்துகொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே

Thursday, June 28, 2012

அவசர உதவிக்கு

நெஞ்சே நீ கலங்குவதேனோ!!!!



நெஞ்சே நீ கலங்குவதேனோ

நெஞ்சே நீ கலங்குவதேனோ
நெஞ்சே நீ தவிப்பதும் ஏனோ
ஒருதரம் கூட உன்சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை - 2

தளர்ந்திடும் போது தாங்கிடும் தூயவர்
தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போதில் காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார் - 2
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்லபாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பனிந்திடுவோம்


பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவாராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலமெல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்லபாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பனிந்திடுவோம்

Friday, September 16, 2011

முதல் தமிழ் வேதாகம பிரதி

முதல் தமிழ்  வேதாகம பிரதியின் முதல் பக்கம்...............

Saturday, June 18, 2011

மற்றொரு இதயத்தை வருடிய பாடல்

இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நீர் எனக்கு போதும் - 4
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் தஞ்சம் -2
இயேசுவே நீர் எனக்கு போதும்  -2


என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – 2
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – 2   நீர் எனக்கு

தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – 2
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – 2    நீர் எனக்கு

Monday, January 10, 2011

கேட்ட பாடல்களிலே மிகவும் பிடித்த பாடல்

இந்த பாடல்களை பாடியவர் S.P.பாலசுப்ரமணியம் :)



எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீர் தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீர் நாதா - 2
கார்காலம் மேகம் கண்டும் கணலானேன் நானே நாதா – 2
இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா

1. என் மனம் சோர்ந்து போகும் வேலை உன்னை கூவி அழைப்பேன்
இறைவா -3
தாய் மடி சேரும் சேயை போல ஓடி வருவேன் -2

எனை அன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான்
எனை என்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான் - 2

நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வ தரிசனம் நீதான் - எங்கெங்


2. என் நிலை பாதையில் மாறும் வேளை வாசல் தேடி வருவீர்
இறைவா -3
தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்

என் வழி துணையாய் ஆன தெய்வம் நீதான்
எனை என்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான்

நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான்
நான் பேசும் மொழியில் தகர நகரம் நீதான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீதான் - எங்கெங்





என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன்எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத்தாயாக நீ மாற வேண்டும்

பாரங்கள் தாங்காமல் சாய்கின்றபோது
பாதங்கள் நீயாக வேண்டும்- எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும்போது
ஓடங்கள் நீயாக வேண்டும்- வரும்

காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும்- சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும்போது
மேகங்கள் நீயாக வேண்டும் -மழை

Tuesday, December 28, 2010

என்ஜாய் (NJOY) - யூத் மீட்

எங்க ஊர்ல (தருமபுரி, தமிழ் நாடு) வருசா வருஷம் ஒரு யூத் மீட் நடக்குது. காலைல 10 மணில இருந்து சாயங்காலம் 5 மனு வரைக்கும் நடக்கும். இதுக்கு அப்புறம் 6-9 ஒரு மியூசிக் கான்செர்ட் நடக்கும்.

இப்போ அடுத்த ஜனவரி 29 ல நடக்க போகுது. அதோட விளம்பரம்.......



இது 2008 ல நடந்த பொது எடுத்த சில போட்டோ


















































2010 ல நடந்த மீட் நோட்டீஸ்.





2011 PRAYER CARD:

Tuesday, December 14, 2010

Billy Day தருமபுரியில்......

பில்லி தர்மபுரிக்கு போன அக்டோபர் மாசம் 10 ஆம் தேதி வந்தார். அவர் ETZC இல பாடிய பாடல் "you tube"ல upload செஞ்சு இருக்கேன்... குவாலிட்டி கொஞ்சம் கம்மி தான்... அட்ஜஸ்ட் பண்ணி கோங்க.........



Friday, August 6, 2010

நன்றி -4 ஆல்வின் தாமஸ் தடுமாறும் கால்களை கண்டேன் - பாடல் வரி

தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை - 2
எனை யோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

எனக்காக பாடுகள் பட்டீரே
எனக்காக நொருக்கப் பட்டீரே ஆண்டவரே
என் மேல் விழ இருந்த ஆக்கினைகள்
உங்க மேல விழுந்திச்சேப்பா
இயேசப்பா இயேசுவே
எனக்காக இரத்தம் சிந்தினீரோ

குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை
மரணம் நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை - 2
எனையோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...