தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2
பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை - 2
எனை யோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2
எனக்காக பாடுகள் பட்டீரே
எனக்காக நொருக்கப் பட்டீரே ஆண்டவரே
என் மேல் விழ இருந்த ஆக்கினைகள்
உங்க மேல விழுந்திச்சேப்பா
இயேசப்பா இயேசுவே
எனக்காக இரத்தம் சிந்தினீரோ
குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை
மரணம் நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை - 2
எனையோசித்தீரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே - 2
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா - 2
No comments:
Post a Comment