Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Thursday, November 1, 2012

இந்திய லினக்ஸ் உபயோகிப்பாளர் குழுமம் - தருமபுரி பிரிவு

இந்திய லினக்ஸ் உபயோகிப்பாளர் குழுமத்தின், தருமபுரி பிரிவு தருமபுரியில் தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் லினக்ஸ் இயக்குதளம் உபயோகிக்கும் போது ஏதேனும் உதவி தேவைபட்டால் இந்த குழுவை அணுகலாம்.

எந்த மாவட்டத்தில் இருந்தாலும் இதன் EMAIL முகவரி மூலமாக உதவிகளை பெற முடியும்.

உதவிக்கு
http://ilugdharmapuri.blogspot.in/

Wednesday, February 23, 2011

வானத்தில் தோன்றும் இரண்டாவது சூரியன்

இந்த உலகத்தில் 2012 கடைசியில் இரண்டாம் சூரியன் தோன்ற நிறைய வாய்புகள் இருக்கின்றன.



இதனால் நம்மக்கு சில நாட்கள் இரவே இல்லாத தாக தோன்றக்கூடிய வாய்புகள் அதிகம்.

பேட்டால்கிஸ்(Betelgeuse), இது வானத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய நட்சத்திரம். இது வெகு சீக்கிரமாக அதனுடைய பருமனை (mass) இழந்து வருகிறது. அதனால் சீக்கிரமாக இது சூப்பர் நோவா (Super Nova) வாக மாறும் என்று எதிர் பார்க்க படுகிறது.

இதிலிருந்து வெளிவரும் வெளிச்சதினால் நம்மக்கு இரவே இல்லாத சில வாரங்கள் 2012 இறுதியில் கிடைக்கும்.

முழு பதிவும் ஆங்கிலத்தில்

Wednesday, February 9, 2011

98.9 °F (37 °C) - நமது உடலின் வெப்ப நிலை - ஏன் ?

இந்த வெப்ப நிலையில் நமது உடலில் நிறைய வித பூஞ்சைகள் கொல்லபடுகின்றன. யஹிவா பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த வெப்ப நிலை விட அதிகமாக இருந்தால் நாம் அதிகமாக சாப்பிட வேண்டும். அதனால் இது ஒரு மிக சிறந்த சமநிலையான 98.9 °F (37 °C) வெப்ப நிலையில் நமது உடலை வைத்திருக்கிறது.

Friday, January 21, 2011

முதல் நாணயம்

உங்களுக்கு தெரியுமா? - உலகில் முதன் முதல் பயன்படுத்தப்பட்ட நாணயம் கி.மு.610-600 ல்லிடியாவை (இன்றைய துருக்கி) ஆண்ட மன்னன் அல்யட்டேஸ் என்பவர் கொண்டுவந்த தங்க நாணயமே....

அது உங்கள் பார்வைக்கு




மேலும் விவரங்களுக்கு "http://rg.ancients.info/lion/article.html" பார்க்கவும்......

Tuesday, February 23, 2010

மன்னிப்பு கேட்க மாட்டேன்… தேவைப்பட்டால் நடிப்பை விட்டுவிடுகிறேன்! – அஜீத்

சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகி மீண்டும் மோட்டார் ரேஸூக்குப் போய்விடுவேன்…” என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியான அஜீத்தின் சிறப்புப் பேட்டியை இங்கே தமிழில் தருகிறோம்.
அவர் கூறியிருப்பதாவது:
“முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்… என்ன நடந்ததே, அதைத்தான் சொன்னேன். எனவே அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அதைவிட நடிப்பை விட்டு விலகுவதையே விரும்புவேன்!
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே… அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிகது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்க நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை… அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக்கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப்பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்ல எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல… எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நானும் பிறப்பால், இருப்பிடத்தால் முழுமையான தமிழன்தான். தமிழனாகவே பிறந்தேன், வாழ்கிறேன் (அஜீத்தின் தந்தை வழியினருக்கு பூர்வீகம் கேரளா. ஆனால் அவரது தந்தை தஞ்சையில் பிறந்து தமிழகத்தில் செட்டிலானவர். தாய் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.).
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், ‘நடிகனுக்கு இங்கே என்ன வேலை?’ என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே…
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணுவேன். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் – அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம். பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார்ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது…”

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...