Showing posts with label Tour. Show all posts
Showing posts with label Tour. Show all posts

Tuesday, December 14, 2010

ரயிலில் பார்த்த மயில்.......

நான் போன மாசம் மும்பை போகும் போது ரெண்டு மயில் குட்டி மாதிரி குழந்தை கலை பார்த்தேன்... அப்டியே mobile ல அள்ளிட்டு வந்துட்டேன்.....



Monday, February 23, 2009

எங்கள் ஏற்காடு பயணம் ( 21.பிப்ரவரி.2009 ) – நடந்தது என்ன ?

எங்கள் அலுவலகத்திலிருந்து நாங்கள் அனைவரும் ஏற்காடு செல்வதற்கு திட்டம் வகுத்து, அதனை 21 ஆம் தேதி செயல்படுத்துவதென முடிவெடுத்தோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றோம். எங்கள் மொத்த டீம் :

1. திரு. உதய் - எங்க தல
2. திருமதி. சவிதா – எங்க தலையோட பாதி
3. பேபி. சுருதி – தலயோட முதல் பொண்ணு
4. பேபி. சம்ருதி – தலயோட ரெண்டாவது பொண்ணு
5. திரு. ஜெயந்தா சௌத்திரி - இவர் எங்க சென்னை டீம் தல
6. திரு. சுதர்சன் - இவர் எங்க புராடக்டுக்கே தல (மெய்ன் ஒர்க் பஞ்சர் ஒட்ரது)
7. திரு. கிஷோர் - இவரு எங்க டோட்டல் போகஸ்க்கே தல
8. திரு. பிரபு - இவருதான் எங்க புராடக்டுக்கு புது துணி கரெக்டா செட் ஆகுதானு பாக்ரவரு (R&D)
9. திரு. கோபி - இவரு ரோல் எங்களுக்கு தண்ணி காட்ற ரோல் – குவாலிட்டி கண்ட்ரேல்
10. திரு. கிருஷ்ணன் - இவருக்கும் “தண்ணி” காட்ற வேலை தான்.
11. திரு. துரைபாபு - இவரு நம்ம கிஷோருக்கு ரைட்ஹேண்டு
12. திரு. சுதர்சணம் - இவரு எங்க தருமபுரி டீம்க்கு பெரிய சீனியர் - வழிகாட்டி கைகாட்டி என்னவானாலும் வைச்சுக்கலாம்
13. அப்பால நான் - திரு. ஜான் கிறிஸ்டோhர் - நம்ம வேலை இப்பதைக்கு ஸ்பானிஷ்கு பஞ்சர் ஒட்றது.
14. திரு. கார்த்தி – ஆரக்கிளுக்கு ராசா இவரு
15. திரு. ரவிசங்கர் - நம்ம கை. புது மாப்பிள்ளை வேற.
16. திரு. வினோத் - இவரும் நம்ம கை தான்.
17. திரு. பரத் - இவரு ஜாவாவுக்கு பெருங்கை
18. திரு. சந்தோஷ் - இவரு பெரும் புராஜக்ட் பி.அஜ்.பி க்கு பெருங்கை


இம்புட்டு பேரும் 4 கார் எடுத்துகினு கிளம்புனோம். (எங்க தலையோட கார் மட்டும் தனியா சேலம் வரைக்கும் வந்துச்சு அப்பால நாங்க ஒன்னாகிட்டோம்). எங்க பிளான் காலைல 7 மணிக்கு கிளம்பறது. போட்ட பிளான்படியே கரெக்ட்டா 8 மணிக்கு (ஹி….ஹி….) கிளம்பிட்டோம்.
காலைல நம்ம வண்டிக்கெல்லாம் பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டுகினு மொத்த தொகைக்கும் நம்ம சுதரோட கிரெடிட்கார்ட தேய்ச்சுகினோம்.
அப்பால நேரா சேலத்துல காலை சாப்பாடு நம்ம சுதரோட (சென்னை) புண்ணியத்துல கிடைச்சுது. இந்த கேப்புல நம்ம தருமபுரி சுதர்சணத்த பிக்கப் பண்ணாம அப்டியே வந்துட்டோம். அப்பால அவரு பஸ்ஸ புடிச்சு ஹோட்டலுக்கு வந்து சேந்தாரு.
ஒரு வழியா நாங்க ஏற்காடு வந்து சேர்ந்தோம். இந்த சைக்கிள் கேப்ல நான் புக் பண்ண ஹோட்டல் பேரு, அந்த ஹோட்டல் போன் நம்பர் எல்லாம் காணோம். உடனே எங்க ஆபீஸ்ல இருக்கற எங்க மேனேஜர்கிட்ட சொல்லி இன்டெர்நெட்ல தேடி….. ஒன்னும் வேலைக்காகல. ஏற்காடு எறின உடனே, எங்க தலையோட லேப்டாப்ல நானே குதிச்சு நீந்தி ஒரு வழியா ஒரு 5 ஹோட்டல் பேர தேர்ந்தெடுத்து அதுல இருந்து நாங்க புக் பண்ண ஹோட்டல கண்டுபிடிச்சோம். ( அப்பாடா……….)
அதுக்கு பின்னால நாங்க லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட், ரோஸ்கார்டன்னு ஒரே சுத்துதான். அந்த ரோஸ் கார்டன்ல எங்க சுதர் கிங்காங் மாதிரி தொங்கினே ஒரு போஸ் குடுத்தாரு பாருங்க… நானே கிங்காங் பார்ட்-3 எடுக்கறாங்களோனு நினைச்சேன். - இதுல அவருக்குபின்னாடியே ஒரு குட்டி குரங்கு வேற (இத வேறயாரும் இல்ல நம்ம துரைபாபு தான்).
ஒரு வழியா நாங்க இந்த இடத்தையெல்லாம் பாத்துட்டு நாங்க புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போய், அந்த வீட்டை பார்த்தோம். இங்க தான் சனி எங்களை கொஞ்சமா முறைச்சிருக்கான். நாங்க சுவாரஸ்யத்துல கவனிக்காம மதிய சாப்பாடுக்கு அதே ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிட்டோம்….(இது நடந்தது ஒரு 2:30 மணியளவில் இருக்கும்). அப்பால நாங்க பக்கோடா பயிண்ட் பாக்க போய்ட்டு ஒரு 3:45 மணிவாக்குல அந்த ஹோட்டலுக்கு வந்தா…. அந்த கொடுமையை என் பிளாக்கால எப்படிங்க சொல்றது, இன்னுமே சாப்பாடு ரெடியாகலயாம். நாங்க வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், அதான் சொல்றேனே நாங்க வெயிட் பண்ணோம்… திரும்ப திரும்ப வெயிட் பண்ணோம்…. அடடா அப்டியேதாங்க நாங்க எல்லாருமே வெயிட் பண்ணோம். ஒரு வழியா 5 மணிக்கு எல்லாருக்கும் சாப்பாடு ரெடியாகி சாப்பிட்டு முடிச்சோம். இந்த முறை எங்க சென்னை தல ஜெயந்தா தான் ட்ரீட்.
அதுக்கு பிறகு என்ன…. நாங்க எற்காடு லேக்குக்கு வந்து ஒரு போட்டிங் போய்ட்டு முடிச்சு டைம் பாத்தா 6:30. அப்பால எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வுட்டோம் ஒரு ஜீட்….. நேரா தருமபுரி வந்தப்போ டைம் சரியா 8:45. அங்க ஒரு 10 பேர் தங்கிட்டு அடுத்த நாள் கிளம்பி தருமபுரி வழியா சென்னைக்கு போனார்கள்…..
இதாங்க நடந்தது…………….

ஏற்காடு டூர் வந்த எங்க டீம் மெம்பர்ஸ் :

இது எங்க செக்ட்ரானிக்ஸ் டீம்:


இது எங்க தருமபுரி டீம்:



இது எங்க ஸ்பானிஷ் டீம்:

Monday, July 23, 2007

எங்கள் ஏற்காடு பயணம்

23.07.07

அன்று விடியற்காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருந்து வாகன ஓட்டுனருக்கு (டிரைவர்) செல் அலைபேசியில் அழைத்து 6 மணிக்கு வீட்டின் அருகே வரச் சொல்லிவிட்டு பின்னர் நாங்கள் மூவரும் (நான் எனது தம்பிகள் அருண் மற்றும் மணி) கிளம்பி சரியாக 6 மணிக்கு வந்த போது தமிழ்செல்வி மற்றும் சங்கீதாவிடமிருந்து போன் அழைப்பு, ஆனந்த் திரையரங்கு அருகே அவர்களை வரச் சொல்லி வண்டியில் ஏற்றிய பின்பு பார்த்தால் மூன்று தடியர்கள் (கார்த்திக், துரை பாபு மற்றும் ஜெயபிரகா~;) இன்னும் கிளம்பாமல் வீட்டிலிருந்தனர். அங்கு சென்று நன்றாக நான்கு அடி வைத்து அவர்களை கிளப்பி வந்தோம். ஒரு வழியாக கார்த்திக் (இது மற்றொரு கார்த்தி) மற்றும் கலை இருவரையும் பிக்கப் செய்து கொண்டு வண்டி ஏற்காடு நோக்கி கிளம்பியது.

ஆன் தி வே யில் நமது சுதர்சனம் போன் செய்து அவரது வீட்டில் சிலபல வேலைகள் இருப்பதால் இந்த இன்ப சுற்றுலாவிற்கு வர இயலவில்லை என்று சொல்லி போனை வைத்தார். பிறகு நீண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு எனது டீம்(பத்மினி) போன் செய்திருந்தார்(அவர் ஹைதராபாத்தில் ஐ.ஐ.டி. யில் சேர்ந்திருப்பதால் வர இயலவில்லை) அவருடன் ஒரு அரை மணி நேரம் போனில் நாங்கள் அரட்டை அடித்தபடியே சேலத்தை 9 மணியளவில் வந்தடைந்தோம். அங்கு காலை டிபனை முடித்துவிட்டு பின்னர் ஏற்காடு சென்ற பொழுது 11 மணி.

முதலில் பக்கோடா பாயின்ட். அங்கு பக்கோடா கிடைக்கவில்லை ஆனால் பொழுது சிறப்பே சென்றது. பின்னர் சில்ட்ரன்ஸ் சீட் சென்றோம். அங்கு துரையை கீழே கிடத்தி உருட்டி விட முயன்றோம். ஆனால் ஜஸ்ட் மிஸ். பின்னர் அங்கு பராக்கு பார்த்து கொண்டே இறங்கி ரோஜா தோட்டத்திற்கு சென்றோம். அங்கு சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்து திரும்பிய பின்னர் அருகிலுள்ள லேடீஸ் ஸீட் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கு கோக் வாங்கி குடித்த படியே அருகிலுள்ளோரை வேடிக்கை பார்த்து கொண்டே சிறிது நேரத்தை கழித்தோம்.

அங்கிருந்து நேராக நாங்கள் சென்ற இடம் சேர்வராயன் மலை. என்ன ஒரு அருமையான இடமாக இருந்த அந்த இடம் இப்பொழுது கேவலமாக இருந்தது. இருந்தாலும் குகைக்குள்ளே இருந்த அந்த கோயில் நன்றாக இருந்தது. அங்கு உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது தான் நமது ஜெயப்பிரகா~; ஏதோ நடையிலேயே கண்டு பிடிப்பேன் என்று பெரிய ஜோக் ஒன்றை அடித்தார் (விவரங்கள் போனில், நேரில் மட்டும் :) ).

அங்கிருந்து நேராக நாங்கள் சென்ற இடம் பார்க், அங்கு சென்று மிளகாய் பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டு நேராக ஓட்டல். அங்கு ஒரு மிக முக்கிய நிகழ்வு. நமது கார்த்திகேயன் அன்று பியர் அடித்தார். அதுதான் மிக முக்கிய நிகழ்வு.

அதன் பிறகு நேராக ஏற்காடு ஏரி சென்று மிதி படகில் சென்றோம். நானும் கலையும் இருவர் மிதி படகிலும், ஜெயபிரகா~;, கார்த்திகேயன், சங்கீதா மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் நான்கு பேர் மிதி படகிலும் சவாரியை ஆரம்பித்தோம். நடுவில் அந்த படகிலிருந்து எங்கள் படகிற்கு கேமராவை மாற்றி சர்கஸ் வித்தைகள் வேறு. பின்னர் அருகிலுள்ள வனச்சரக பூங்கா மற்றும் மீன் பார்வையிடம் பார்த்து வெளியே வந்தபோது மணி 5 ஆகியது. நாங்கள் எங்கள் பயணத்தை முடித்து திரும்ப சேலம் வந்தபோது மணி 6.45. நாங்கள் எதிர்பார்த்ததற்கு முன்னமே வந்ததால் சேலத்திலுள்ள அண்ணா பார்க்கிற்கு சென்றோம்.

அங்கு நமது துரைக்கு கோபம் வந்து எங்களை நட்டாற்றில் விட்டு விட்டு வெளியேறினார், பின்னர் போன் செய்து சொல்லிய பிறகு திரும்ப வந்தார் (இருந்தாலும் இரவு விருந்தில் சரியாக சாப்பிடாமல் கோபத்தை வெளிக்காட்டினார்).

அதன் பிறகு நாங்கள் வந்த இடம் கிரீன் பார்க் ரெஸ்டாரென்ட். மணி 7.45. அங்கு டின்னர். ஆடு கோழி மீன் இரால் நண்டு வகைகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டோம். அங்கே நமது சுதர்சனம் மற்றும் திவ்யா இருவரும் நமது விருந்தில் இனைந்தனர்.

பின்னர் 9.30 மணியளவில் கலை மற்றும் ஜெயபிரகா~; இருவரையும் பெங்க@ரு செல்லும் பேருந்தில் எற்றிவிட்டு, நான் கார்த்தி மற்றும் கார்த்திகேயன் மூன்று பேரும் அலறியடித்து (காரணம் போனில் அல்லது நேரில் மட்டும்) வந்து பஸ்ஸில் ஏறி பயணத்தை தொடர்ந்தோம். வழியில் டிராபிக் ஜாம். ஒரு மணி நேரம் தொப்பூர் அருகே நின்று பின்னர் 12 மணியளவில் வீட்டை அடைந்து உறங்க ஆரம்பித்தோம்.

Tuesday, February 13, 2007

எனது பாண்டிச்சேரி பயணம்

எங்களது (நான் மற்றும் எனது நன்பர் திரு.ம.செந்தில்குமார்) பாண்டிச்சேரி பயணம் 9.2.07 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கியது. முதலில் தருமபுரியிலிருந்து புறப்பட்ட நாங்கள் திருவண்ணாமலைக்கு சென்றோம். அந்த பேருந்தில் பாடாவதி படம் உலக பேருந்து வரலாறில் 10000 ஆவது முறையாக அஜீத் நடித்த வில்லன் திரைப்படம். அப்பா ஒரு வழியாக அந்த படம் முடிந்தவுடன் நல்ல பாடல்களாக போட்டு (ஊமைவிழிகள், செந்தூரப்பூவே....) எங்களது காதில் பாலை ஊற்றினார் அந்த டிரைவர்.

திருவண்ணாமலையில் நாங்கள் இரண்டு நல்ல ஹோட்டல்களுக்கு சென்று ஒன்னுமே சாப்பிடாமல் திண்டிவனம் பஸ்ஸில் ஏறினோம். அதில் சீட் ஒன்றாக அமர சீட் கிடைக்காததால் பிரிந்து அமர்ந்து மற்ற பயணிகளை தொந்திரவு செய்யாமல் அமைதியாக திண்டிவனம் வந்து சேர்ந்த பொழுது சரியாக இரவு 10.50. அதன்பிறகு ஒரு சூப்பர் பஸ்ஸில் பாண்டிச்சேரி பயணம். அடடா காதில் தேன் வார்த்தது போன்ற பாடல்கள் (முக்கியமாக ஜக்கம்மா பாட்டு படா சோக்கா இஞ்சிபா.....)

கண்,காது,மூக்கு மற்றும் இன்னபிற வலிகளுடன் பாண்டி வந்த பிறகு அங்கிருந்து அரியாங்குப்பத்திற்கு பஸ் ஏறி வீட்டிற்கு ஒரு கிலோமீட்டர் நடக்க வைத்து கூட்டி சென்றதில் உடம்பில் நட்டுகள் கழன்று ஒரு வழியாக தூங்கினோம்.

அடுத்த நாள் காலை 7.30 மணியளவில் எழுந்து கிளம்பி புதுவகையாக தயாரிக்கப்பட்ட இடியாப்பம் (முதலில் இட்லி அவித்து பின்னர் ஒரு குழாய் போன்ற அமைப்பில் செருகி மேலே திருவினால் அவித்த இட்லி இடியாப்பமாக மாறுகிறது!!!!) தேங்காய் பாலுடன் (இதுதான் எனது முதன் முதல் இடியாப்பம் வித் தேங்காய்ப்பால்... ரொம்ப சுவையாக இருந்தது..) சாப்பிட்டுவிட்டு இரண்டு வண்டிகளில் (பஜாஜ் பல்சர் மற்றும் பஜாஜ் எம்80) நாங்கள் இருவர், செந்திலின் தம்பி மற்றும் அவரின் நண்பர் நால்வரும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று தரிசனம் (!!!!!!!) பார்த்துவிட்டு பிறகு ஆரோவில்லிற்கு சென்றோம்.

அங்கு ஒரு படத்தை போட்டுவிட்டு இதை பார்த்தால் தான் பாஸ் தருவோம் என கூறி அதை பார்க்க வைத்தனர். இந்த சந்து கேப்பில் இரண்டு பிகர்ஸ் (பெண்கள்...) வந்து அந்த பாஸ் ஒரு கத்தை (8 பாஸ்) எடுத்து கொண்டு கம்பி நீட்டிவிட்டார்கள். நாங்கள் படத்தை பார்த்த பிறகு எங்கள் நால்வருக்கும் சேர்த்து ஒரு பாஸ்ஸில் 4 என்று எழுதி கொடுத்துவிட்டார்கள். நாங்கள் அடித்துபிடித்து சென்றால் அங்கு கேட்டில் அந்த 8 பேரையும் நிறுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் விசாரனை. அது ஒரு பயங்கர தமாசு. பிறகு அந்த காவலர் அவர்களை எச்சரித்து உள்ளே அனுமதித்தார். அங்கு உள்ளே அந்த கோளவடிவ அரங்க வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் எங்களை உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அங்கு வெளியிலிருந்து பார்க்கும் போதே எங்களுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டோம். வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஒரு சூப்பர் திரைப்படத்திற்கு ( பாவனா (ஜொள்ளு...) மற்றும் ஜெயம் ரவி நடித்த தீபாவளி) சென்று பாவனாவை மட்டும் பார்த்து விட்டு (வேறு ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அந்த படத்தில் ஒன்றும் இல்லை) பின்னர் கடற்கரை சென்று அங்கிருந்த நல்ல நல்ல ...... இடங்களை மட்டும் பார்த்துவிட்டு ஊரை சுற்றிவிட்டு அங்கு பானிபூரி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று பெரிய தம்ளரில் ரசத்தை ஊற்றி குடித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தோம். பிறகு தொலைகாட்சியில் நமது சாம்பார் நடித்த (ஜெமினிகணேசன்) சாந்திஇல்லம் படம் பார்த்துவிட்டு நன்றாக தூங்கினோம்.

அடுத்தநாள் காலை 7.00 மணிக்கு எழுந்து கிளம்பி சிதம்பரம் செல்வதற்காக சென்றோம். பாண்டியிலிருந்து கடலூர் சென்று அங்கிருந்து சிதம்பரம் சென்றேபொழுது காலை மணி 9.30. சிதம்பரத்தில் எனது நண்பர் நீலகண்டனின் வீட்டிற்கு சென்று காலை உணவு அருந்திவிட்டு (இரண்டாவது முறை சாப்பாடு, முதல் சாப்பாடு பாண்டியில் 7.30 க்கு ஒரு ஹோட்டலில்) நடராசர் கோவிலுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு திரும்ப வீட்டிற்கு செல்லும்போது மணி 1.00 தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே தயாராய் இருந்த மதிய உணவையும் முடித்தோம். பிறகு அங்கிருந்து 2.00 மணியளவில் கிளம்பி கடலூர் வழியாக பாண்டி வந்தடைந்தபோது செல்பேசி மணி 4.30 என்றது. பின்னர் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்த பின் எறால் பிரியாணி, எறால் வறுவல், கடல்மீன் குழம்பு என்று ஒரு பிடிபிடித்து விட்டு அருகிலிருந்த கடற்கரைக்கு சென்று சுமார் 1.30 மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் 8.00 மணிக்கு வீட்டிற்கு சென்று அங்கிருந்து கிளம்பி பேருந்து நிலையம் சென்றோம். அங்கு நின்று கொண்டிருந்த சேலம் செல்லும் பஸ்ஸில் கடைசி சீட்டிற்கு முன்னிருந்த சீட்டில் அமர்ந்து கொண்டு அவரை நல்லபடியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டு வாங்கியிருந்த பாக்யா புத்தகத்தில் மூழ்கினேன். பஸ் ஒரு வழியாக 10.00 மணிக்கு கிளம்பியது அது கடலூர் வழியாக பன்ருட்டி வரும் வரை தூக்கம் இல்லாமல் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துகொண்டு வந்தேன். பின்னர் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்து பார்த்தால் மிகமிக மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சின்னசேலம் வந்து விட்டது. பின்னர் மெதுவாக நகர்த்தி நகர்த்தி சேலம் வந்து சேரும் பொழுது காலை 4.00 மணியாகிவிட்டது. பின்னர் அங்கு புறப்பட தயாராக இருந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறினால் தருமபுரியை அது ஒரு மணிநேரத்தில் வந்தடைந்தது (65 கி.மீ.).

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...