எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Wednesday, September 14, 2022
புறம்போக்கு
Thursday, September 2, 2021
தருமபுரியில் 36வது தேசிய புத்தக கண்காட்சி
Tuesday, November 29, 2016
பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?
🍁
🌺 *பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*
*பட்டா :*
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
*சிட்டா :*
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
*அடங்கல் :*
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
*கிராம நத்தம்*
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
*கிராம தானம் :*
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
*தேவதானம் :*
கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
*இனாம்தார் :*
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு.
நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது.
ஷரத்து= பிரிவு.
இலாகா = துறை.
*கிரயம்*
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
*வில்லங்க சான்று*
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின் விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண் = நில அளவை எண். (Survey number)
இறங்குரிமை =
வாரிசுரிமை (succession)
*தாய்பத்திரம்*
(Parent deed)
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
*ஏற்றது ஆற்றுதல்*
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)
*அனுபவ பாத்தியம்*
( possessory right)
நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.
*சுவாதீனம் ஒப்படைப்பு*
நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி = வருவாய்தீர்வாயம்.
நன்செய்நிலம் =
அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம் =
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
*குத்தகை*
(Lease)
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
🍁🙏🌺
🍁
Sunday, October 16, 2016
பை - 22/7 என்பது என்ன ?
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது
வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.
சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)
அப்போது ஒரு மாணவர் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...
மாணவர் : இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.
ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?
மாணவர் : சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.
ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.
மாணவர் : ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.
ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.
இருப்பினும் மாணவர் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து மாணவர் வகுப்பில் உள்சென்றார்
இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.
மாணவரின் தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். மாணவரின் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணி மாணவரிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற மாணவர் எழுத வேண்டும்.
அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் மாணவரை நெருடியது. அவ்வாக்கியம்,
ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.
இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக மாணவருக்கு நினைவுக்கு வர, தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினான்.
பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.
அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.
இந்த விளக்கம் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். மாணவரும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டான் . அதற்கு தாத்தா கூறிய வார்த்தைகள் தான் மாணவர் மிகவும் பாதித்தது.
அவ்வார்தைகள்.....
உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ....
ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைவோம் .
ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???
எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????
உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன?
சிந்தியுங்கள் நண்பர்களே???
*இப்போது உள்ள கல்வி முறை ஆங்கிலேயர்கள் நம்மை சிந்திக்க விடாமல் நம்மை அடிமையாக அலுவலக உதவியாளர் பணிக்கு தயார் படுத்திட உருவாக்க பட்ட பாடத்திட்டம் தான் இன்றைய போதனை வழி கல்வி முறையும்,*
*புரிந்து கொள்ளாத மொட்டை மனப்பாட கற்றல் முறையும்.*
படித்ததில் பிடித்தது.
Monday, September 26, 2016
அப்பா
ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.
6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.
10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..
12 வயதில்-
ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.
14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.
16 வயதில்-
அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.
18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?
20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?
25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?
30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?
40 வயதில்-
ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!
45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ
50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.
55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.
60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!
முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.
நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..
Sunday, September 18, 2016
ஒரு கார்ப்பரேட் நீதி கதை
*ஒரு கார்ப்பரேட் நீதி கதை: அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.*
ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.
ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.
இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.
புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான். கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.
மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.
வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது. அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.
நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Monday, June 3, 2013
Tuesday, December 11, 2012
Wednesday, February 9, 2011
98.9 °F (37 °C) - நமது உடலின் வெப்ப நிலை - ஏன் ?
இந்த வெப்ப நிலை விட அதிகமாக இருந்தால் நாம் அதிகமாக சாப்பிட வேண்டும். அதனால் இது ஒரு மிக சிறந்த சமநிலையான 98.9 °F (37 °C) வெப்ப நிலையில் நமது உடலை வைத்திருக்கிறது.
Friday, January 21, 2011
முதல் நாணயம்
அது உங்கள் பார்வைக்கு
மேலும் விவரங்களுக்கு "http://rg.ancients.info/lion/article.html" பார்க்கவும்......
Wednesday, January 5, 2011
உலகின் முதல் புகை படம்
1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஜோசப் நிப்சே (Joseph Niepce) என்பவர் தான் உலகின் முதல் புகை படத்தை எடுத்தவர். இது ஒரு கட்டிடத்தின் (farm building) புகை படம்.
இதை கழுவி எடுக்க அவருக்கு 8 மணி நேரம் பிடித்தது.
யாருக்குமே அவர் என்ன வேதியல் பொருட்களை பயன் படுத்தினார் எனபது தெரியவில்லை.

இதை பற்றி இன்னும் அறியமுதல் புகை படம்
Thursday, December 30, 2010
சீனா வில் ஸ்கைப் (Skype) தடை செய்யப்பட்டது
"சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம்" இதை தவிர வேறு யாரும் இனிமேல் சீனா வில் தொலை தொடர்பு சேவை தர முடியாதபடி சட்டம் போட்டுள்ளனர்
Tuesday, December 28, 2010
என்ஜாய் (NJOY) - யூத் மீட்
இப்போ அடுத்த ஜனவரி 29 ல நடக்க போகுது. அதோட விளம்பரம்.......
இது 2008 ல நடந்த பொது எடுத்த சில போட்டோ
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() |
2010 ல நடந்த மீட் நோட்டீஸ்.

2011 PRAYER CARD:

Friday, April 30, 2010
திருக்குறளுக்கு விளக்கம் தேவையில்லை: இளையராஜா
சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கானசபாவில் ஞாயிற்றுக்கிழமை, கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள குறள் தரும் பொருள் இசை சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியது:÷2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
1929-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது "நான் உங்கள் வீட்டு பிள்ளை' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், "ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர் என்றார்.
நடிகர் விவேக்: "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும் என்றார்.
நடிகர் எஸ்.வி.சேகர்: இசைக்கு மொழி பேதம் கிடையாது. தெலுங்கு மொழியே தெரியாவர்கள் கூட கீர்த்தனைகளை பாடுகிறார்கள், கேட்கிறார்கள். இசை என்பது மொழிக்கு அப்பாற்பட்டது. கலை என்பது அரசியலை தாண்டிய விஷயம் என்றார்.
கவிஞர் பூவை செங்குட்டுவன்: திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளை படித்து மு.வ. சாரங்களை வைத்துக் கொண்டு 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது என்றார். இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், நடிகர் உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
THANKS : Mail from SSiva
வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.
வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.
1. விண்வெளி பொறியியல் 2. வங்கி மற்றும் காப்பீடு 3. பயோ டெக்னாலஜி 4. பி-_பார்ம் 5. பி.பி.ஓ இண்டஸ்ட்ரி 6. கணினி மற்றும் மென்பொருள் 7. நிகழ்ச்சி மேலாண்மை 8. பேசன் மேனேஜ்மென்ட் 9. மனித உரிமைகள் 10. விருந்தோம்பல் மேலாண்மை 11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் 12. தகவல்துறைத் தொழில்நுட்பம் 13. தொழிற்ச்சாலை உறவுகள் 14. பன்னாட்டு வாணிபம் 15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் 16. ஊடகம் மற்றும் இதழியல் 17. பொருள் மேலாண்மை 18. உற்பத்தி மேலாண்மை 19. பணியாளர் மேலாண்மை 20. கிராம மேலாண்மை 21. போக்கு வரத்து மற்றும் சுற்றுலா 22. சில்லறை வியாபார மேலாண்மை 23. செலவு மற்றும் மேலாண்மை கணக்கு பதிவு 24. மண்ணியல் 25. தோட்டக்கலை 26. விளம்பர மேலாண்மை மாணவர்கள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவை கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவரும் தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:
போட்டித் தேர்வுகள் இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம் கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
இந்த பிரிவை
1) நுழைவுத் தேர்வுகள்
2) பட்டபடிப்புகள்
3) டிப்ளமோ படிப்புகள்
4) சான்றிதழ் படிப்புகள் என 4 பிரிவுகளாக பிரித்து சற்று விரிவாக பார்ப்போம்.
1) நுழைவுத் தேர்வுகள்
1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (அய்.அய்.டி) 2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் 3. அய்.அய்.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
4. கம்பைடு என்ட்ரன்ஸ் எக்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)
5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
6. என்.அய்.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)
7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)
2) பட்டப்படிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்
1. வானூர்தி பொறியியல் 2. கட்டடக்கலை 3. தானியங்கி பொறியியல் 4. பயோ இன்பர்மேட் டிக்ஸ் 5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டே சன் என்ஜினியரிங் 6. பயோ டெக்னாலஜி 7. கட்டடக்கலை பொறியியல் 8. வேதிப் பொறி யியல் 9. தீயணைப்பு பொறியியல் 10. கணினி அறிவியல் பொறியியல் 11. கம்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் 12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் 13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு 14. மின்னியல் மற்றும் கருவி யியல் 15. தொழிற்சாலை பொறியியல் 16. சுற்று புற பொறியியல் புவித்தகவல்கள் 17. தகவல்துறைத் தொழில்நுட்பம் 18. கருவியியல் பொறியியல் 19. தோல்பொருள் தொழில்நுட்பம் 20. உற்பத்திப் பொறியியல் 21. மெரைன் இன்ஜினியரிங் 22. எலக்கட்ரானிக்ஸ் 23. மெட்டாலஜிக்கல் என்ஜினியரிங் 24. சுரங்கப் பொறியியல் 25. எரிபொருள் வேதிப்பொறியில் 26. பாலிமர் என்ஜினியரிங் 27. உற்பத்திப் பொறியியல் 28. அச்சுப்பொறியியல் 29. ரப்பர் டெக்னாலஜி
30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங் 3) டிப்ளமோ படிப்புகள்
1. கட்டடப் பொறியியல்
2. மின்சாரப் பொறியியல்
3. மின்னணுப் பொறியியல்
4. இந்திரவியல் பொறியியல்
5. உற்பத்திப் பொறியியல்
6. வேளாண்மை பொறியியல்
7. கணினி அறிவியல் பொறியியல்
8. மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு
9. கட்டடக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
10. வேதிப்பொறியியல்
11. தோல்பொருள் தொழில்நுட்பம்
12. வேதித்தொழில்நுட்பம்
13. பாலிமர் தொழில்நுட்பம்
14. பல் பேப்பர் தொழில்நுட்பம்
15. மென்பொருள் தொழில்நுட்பம்
16. மீன்வளத் தொழில்நுட்பம்
17. கைத்தறி தொழில்நுட்பம்
18. அச்சுத்தொழில்நுட்பம்
19. பிளாஸ்டிக் டெக்னாலஜி
20. சர்க்கரைத் தொழில்நுட்பம்
21. டெக்ஸ்டைல் டெக்னாலஜி
22. கணினித் தொழில்நுட்பம்
23. கார்மெட் டெக்னாலஜி
24. மரத் தொழில்நுட்பம்
25. வனத்துறைத் தொழில்நுட்பம்
26. காலணிகள் தொழில்நுட்பம்
27. போர்மேன் டெக்னாலஜி
28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
29. ரெப்ரிஜிரேசன் 30. விற்பனைத் துறை
31. காஸ்மெட்டாலஜி 4) சான்றிதழ் படிப்புகள்
1. பிளாக்ஸ்மித்
2. தச்சுத்தொழில்
3. மோல்டர் 4. பெயிண்டர்
5. ஷீட் மெட்டல் ஒர்க்கர்
6. கட்டடம் கட்டுபவர்
7. பேட்டரி மேக்கர்
8. மெக்கானிக் டீசல்
9. பிளம்பர்
10. மெக்கானிக் கிரெய்ண்டர்
11. மெக்கானிக் மோட்டார்
12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
13. வெல்டிங் கேஸ் மற்றும் மின்சாரம்
14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
15. ஒயர்மேன்
16. டர்னர்
17. மெக்கானிஸ்ட்
18. பிட்டர்
19. எலக்ட்ரோ பிளேட்டர்
20. ஒயர்லெஸ் ஆப்ரேட்டர்
21. சர்வேயர்
22. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 23. எலக்ட்ரீசியன்
24. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிசனிங்
25. கருவி வடிவமைப்பாளர்
26. டிராப்ஸ்மேன் சிவில்
27. டிராப்ஸ்மேன் மெக்கானிக்
28.மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
29. மெக்கானிக் ஜெனரல்
30. பிழைதிருத்தல்
31. சுருக்கெழுத்து ஆங்கிலம்
32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேன்சி அண்ட் பர்னிஷிசிங் பேப்ரிக்ஸ்
33. எம்பர்ராய்டரி அன்ட் டெய்லரிங்
34. கட்டிங் அண்ட் டெய்லரிங்
35. காலணிகள் உருவாக்குதல்
36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
இந்த பிரிவை
1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள் 2) மருத்துவப் பட்டப்படிப்பு டிப்ளமோ சான்றிதழ் தகுதி
3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
4) உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்
5) மனை அறிவியல்
6) பொதுப்பாடங்கள் என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
1)மருத்துவ நுழைவுத் தேர்வு :
1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் - பூனே
2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - உ.பி
3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெடல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜுகேசன்
4.ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் - புதுச்சேரி
5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (உ.பி)
6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி - (வேலூர்) 7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் - (புதுடில்லி) மருத்துவப் - பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்
1. எம்.பி.பி.எஸ்.
2. பி.டி.எஸ்.
3. பி.ஹெச்.எம்.எஸ்
4. பி.ஏ.எம்.எஸ்
5. பி.எஸ்.எம்.எஸ்
6. பி.பார்ம்
7. பி.பி.டி.
8. பி.எஸ்.சி (நர்சிங்)
9. பி.ஒ.டி. மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி
1. மருத்துவத் தொழில்நுட்பம்
2. லேப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
3. லேப் டெக்னீசியன்
4. இ.சி.ஜி டெக்னீசியன்
5. டெப்டல் மெக்கானிக்
6. ஆப்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
8. கோர்ஸ் இன் ஆட்டோமெட்ரி
9. ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்
12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
13. மருத்துவ நுண்ணுயிரியியல்
14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
15. பெரிபுயூசன் டெக்னாலஜி
16. பிசியோதெரபி
17. ஸ்பீச் தெரபி
18.நர்சிங் வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
2. பால்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச் உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்
1. விலங்கியல் - பி.எஸ்.சி
2. மீன்வளம் - பி.எஸ்.சி
3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி 6. நுண்ணுயிரியல் - பி.எஸ்.சி, எம்.எஸ்.சி மனை அறிவியல்
1. மனை மேலாண்மை
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து 3. குழந்தை வளர்ச்சி
4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
5. உணவு சேவை மேலாண்மை
6. டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
7. டெக்ஸ்டைல்ஸ் கிராப்ட்
8. உணவுத்தொழில்நுட்பம்
9. மனித ஊட்டச்சத்து
10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
11. உணவு உற்பத்தி
12. பயன்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி பொதுப்பாடம்
1. இயற்பியல்
2. வேதியியல்
3. தாவரவியல்
4. விலங்கியல்
5. பயன்பாட்டு புள்ளியல்
6. பயன்பாட்டு கணிதம் பொருளாதாரம், கணக்குப் பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
1. சாட்டர்டு அக்கவுண்டன்சி
2. வங்கியியல்
3. சட்டப்படிப்பு- (பி.எல்)
4. மேலாண்மை -(பி.பி.ஏ)
5. பொருளாதாரம் -(பி.ஏ)
6. வணிகவியல்
7. டீச்சிங்
8. உலக அறிவியல்
9. உளவியல்
10. வரலாறு
11. புவியியல்
12. ஆங்கிலம்
13. மொழி
14. இசை
15. நிதி
16. ஊடகம்
17. தகவல் தொடர்பு
18. காஸ்ட்அக்கவுண்டன்சி
உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:
1. உடற்கல்வி
2. சட்டப்படிப்பு
3. ஏவியேசன் - விமானப்பணிப்பெண்
4. பாஸ்மெட்டாலஜி
5. பேஷன் டெக்னாலஜி
6. காப்பீடு
7. கடல்சார்படிப்பு
8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா
9. நிழல் படம் பற்றிய படிப்பு
10. கலை/பயன்பாட்டுக் கலை
11. நகை வடிவமைப்பு
12. பேஷன் மாடலிங்
14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
16. கலையரங்கம் மற்றும் நடிப்பு
17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
18. நடிப்பு
19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
20 சினிமாஸ்மோகிராபி
21. இயக்கம்
22. டைரக்சன் ஸ்டோரி பிளே ரைட்டிங்
23. வீடியோகிராபி
24. பிலிம் எடிட்டிங்
25. நாடகக்கலை
26. பிலிம் டைரக்டிங்
27. சினிமா நடிப்பு
28. ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்
29. பிலிம் எடிட்டிங்
30. படத் தயாரிப்பு
31. பிலிம் பிராசசிங்
32. பிலிம் ஸ்டடிஸ்
33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
34. பிரிஹேன்ட் அனிமேசன்
35. பண்டமென்டல் அன்ட் ஆடியோ விஷூவல் எஜுகேசன்
36. மோசன் பிக்சரி போட்டோகிராபி
37. நிகழ்ச்சி மேலாண்மை
38. விஷூவல் கம்யூனிகேசன்
39. புத்தகப்பதிப்பு
40. அரசியல் அறிவியல்
41. குற்றவியல்
42. விக்டிமாலஜி
43. நடனம்
44. ஜெம்மாலஜி
45. தொழிற்ச்சாலை வடிவமைப்பு
46. பூமி பற்றிய அறிவியல்
47. நகரத் திட்டமிடல்
48. மண்ணியல்
49. சமூகவியல் போட்டித் தேர்வுகள்
படிப்பை முடித்த பின்னர் போட்டித் தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளை
1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள்.
2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாக பிரிக்கலாம்.
1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்:
1. பொறியியல் துறைத் தேர்வுகள்
2. வங்கித் தேர்வுகள்
3. இந்திய வனத்துறைத் தேர்வுகள்
4. மண்ணியல் துறைத் தேர்வுகள்
5. கம்பைடு மருத்துவத்துறை தேர்வுகள்
6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
7. சிவில் சர்வீஸஸ் தேர்வு
8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
9. ரயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்
2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்
1. சிவில் சர்வீஸஸ் தேர்வுகள்
2. வருமானத்துறைத் தேர்வுகள்
3. எக்சைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள் 4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்
வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் வாழ்க்கைத்தொழில் திட்டமிடல் உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறலாம்.
தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
Thanks: viduthalai
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
ஒரு புனிதர் அவரது சிஷ்யர்களிடம் கேட்டார் “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்?”, “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்...