ஒருத்தன் Rs.200 வச்சி இருக்கான், அவன் அத 4 பேருக்கு Rs.100 னு பிரிச்சி குடுக்கறான்.
கணக்கு சரியா? இல்ல தப்பா?
கணக்கு சரி தான். ஏன்னா.....
நாலு பேருக்கு நல்லது நடக்குது னா எதுவுமே தப்பு இல்ல......
எனது புலம்பல், அலம்பல், நக்கல்,கிண்டல் மற்றும் அடுத்வனோட வயித்தெரிச்சல் எல்லாம்......
Showing posts with label Joke. Show all posts
Showing posts with label Joke. Show all posts
Wednesday, December 22, 2010
Saturday, March 7, 2009
மொக்கைச்சாமி
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி வரம் வேணும்னு தவம் இருந்தானாம். கடவுள் கேட்டாராம், இவன் சொன்னானாம்....
"கடவுளே.... எனக்கு சாவே வரக்கூடாது".
"அப்படியே ஆகுக" ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.
ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல வந்துட்டிருக்கறப்ப ஒரு சாமியார் எதிர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாரம்...
இவன் சொன்னானாம்.... "மொக்கை மாமி"
பாவம்... அவனுக்கு 'சா' வே வரல!

Friday, February 20, 2009
இனிப்புத் திருடன்
Tuesday, March 27, 2007
நாயகன் பாணியில் இந்திய அணியின் நாயகன் பேசினால்...??!!
அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன். கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலே மீட்டர் ஓடிப்போங் பந்ததைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்தறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால் வடை வைக்குற மாதிரி ஸ்pலப் வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்த்னே அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் நோபால் போட்டான் பாரு டெண்டுல்கர் அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல் நான் நிறுத்தறேன். எந்தப்பக்கம் அடிச்சாலும் அந்தப்பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு அதை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்கிறானுங்க பாரு அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்தறேன். புறபடும்போதே கமான் இந்தியான்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன் அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா, எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வௌஸ்தை கெட்டவனுங்க, அவனுங்களை நிறுத்தச்சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..
நவரச நாயகன் திராவிட் பராசக்தி பாணியில் பேசினால்?!!!
உலகக் கோப்பை. பல விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.
பங்களாதேசிடமும் இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடமும் தோற்றேன்- அவர்களிடம் தோற்க்க வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த வஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையை தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. தங்களைப்போல பிறரையும் நேசி என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.
உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீல்டரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச் சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் சாத்து சாத்தென்று சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் வெயில் தாங்கலைன்னு பெவிலியனுக்கு ஓடும் மாஸ்டர் பிளாஸ்டர்களால் பாதிக்கப்பட்டேன்.
கேளுங்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தயவு செய்து கேளுங்கள் என் கதையை...

Wednesday, March 21, 2007
கிரிக்கெட் மாப்ள..... கிரிக்கெட்!!!
இன்சமாம் : நீ முன்னாலே போ நான் பின்னாலே வரேன்னு சொல்லி இப்படி ஏமாத்திப்புட்டியே பங்காளி
டிராவிட் : அட நீங்க வேற பங்காளி.... அவனவன் வீடு புகுந்து அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... சம்பாதிச்ச காசு... பொண்டாட்டி, புள்ள... அடுத்த அட்வர்டைஸ்மண்ட் எல்லாம் பார்க்க வேண்டாமா!!! அதான் நான் கூட கடைசி பால்ல சிக்ஸ் அடிச்சேன்....
லீவராக் : என்ன ஏதுன்னு கேட்காம ஒரு பச்ச புள்ளய போட்டு இப்படி துவைச்சு துவம்சம் பண்ணிட்டியேடா... நீ அடிச்சது ஒரு புள்ள பூச்சிய.. உணக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடையாது... இதுக்கெல்லாம் ஒரு ரெப்ரி.... மூணு அம்பயர்ஸ்!!!
டிராவிட் : நீங்கதாண்டா பால் போட்டீங்க... ஏன் அப்படி போட்டீங்க?
லீவராக் : அது உங்க பேட்ஸ்மேன் ஒருத்தன் சொன்னான்..... நாம எப்படி அடிச்சாலும் இவன் நல்லா பந்து போடுறான்டா!! இவன் ரொம்ப நல்லவன்னுட்டான்டா....
கிரிக்கெட் கவுன்சில் : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!!

Subscribe to:
Posts (Atom)
புறம்போக்கு
புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கிறோம். பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...
-
நீ போகும் இடமெல்லாம் பாடல் வரி :Dr.Rev.Ezekiel George. Music : Suresh George. நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே ந...
-
சீர் தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே கார்நிற மேனக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான வல்லபை தன்னை மவிய மார்பா! பொங்கர வணிந்த புண்ணிய ம...
-
ஒரு புனிதர் அவரது சிஷ்யர்களிடம் கேட்டார் “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்?”, “நாம் ஏன் கோபம் வரும்போது சத்தமிட்டு பேசுகிறோம்...